Header Ads Widget

Responsive Advertisement

beekeeping sri lanka தேனீக்களின் வகை


தேனீ வளர்ப்பு
தேனீ வளர்க்க ஆர்வமுள்ளவர்கள், தேனீ வளர்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்காக தேனீக்களை வளர்க்க விரும்புவோர் அவசியம் தேனீக்களையும் அதன் வகைகளையும் அதன் இனங்களையும் அதன் தன்மையையும் கட்டாயம் தெறிந்துகொள்ளவேண்டும்.
அந்த வகையில் நாம் தேனீக்களின் இனங்களைப் பற்றி தெறிந்து கொள்வோம்.

தேனீ இனங்கள்
beekeeping sri lanka தேனீக்களின் வகை
beekeeping sri lanka தேனீக்களின் வகை

தேனீ கூட்டானது மூன்று வகை தேனீக்களை கொண்டுள்ன. ஒவ்வொரு தேனீக் குடும்பத்திலும் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. 

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு உடல் அமைப்பைப் கொண்டுள்ளதுடன் அவற்றின் செயற்பாடுகளும் ஒன்றுகொன்று வேறுபடும்.
மூன்று வகை தேனீக்களின் கூட்டணிதான் தேனீ குடும்பம் (கொளனி). 

ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்ற வேற்றுமையை உணர்த்தும் உடல் உறுப்பு வித்தியாசம் மட்டுமே இருக்கும். ஆனால், தேனீக்களில் மட்டும் மூன்று வகையான உடல் அமைப்புகள் உள்ளன.

தேனீக்களின் முக்கூட்டனி அமைப்பு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களை விட்டும் மாறுபட்ட அமைப்பாக காணப்படுகின்றது. 

அதுமாத்திரமல்லாமல் ஒரு தலைமையின் கீழ் எப்படி செயற்படவேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்கு எடுத்துக்காட்டாகவும் தேனீக்களின் செயற்பாடு சான்று பகர்கின்றன.

ராணித் தேனீ

beekeeping sri lanka தேனீக்களின் வகை
beekeeping sri lanka தேனீக்களின் வகை

தேனீக் கூட்டத்தில் ராணித் தேனீ ஒன்றுதான் இருக்கும். அது ஏனைய  தேனீக்களுக்கெல்லாம் தலைவியாக அந்த கூட்டத்துடைய நிர்வாகத்தை செயற்படுத்தும். ராணியானது அனைத்து வகையிலும் தனித்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

ராணித் தேனீ பூரண வளர்ச்சியுற்ற பெண் தேனியாகும். ராணியால் மட்டுமே ஆண் தேனீக்களுடன் புணர்ந்து இனவிருத்தி செய்ய முடியும். இது ஏனைய தேனீக்களை விட உருவில் பெரிதும், மாறுபட்ட நிறத்தையும் கொண்டது.

மகரந்தம் சேகரிக்கும் அமைப்புகள் கால்களில் இல்லாததால் ராணித் தேனீயால் உணவு சேகரிக்க முடியாது.

அதே போல் மெழுகுச் சுரப்பிகள் இல்லாததால் ராணித் தேனீயால் கூடு கட்டவும் இயலாது. 

நீண்டும் கூம்பியும் உள்ள வயிற்றின் நுனியினுள் இருக்கும் கொடுக்கை முட்டையிடவும், பிற ராணித் தேனீக்களை கொட்டிக் கொல்லவும் பயன்படுத்துகின்றது.

நன்கு வளர்ச்சியடைந்த இரு சினைப் பைகள் முட்டைகளை உருவாக்கவும் விந்துப்பை புணர்ச்சியின் போது ஆண் தேனீக்களிடமிருந்து பெறும் விந்தைச் சேமிக்கவும் உதவுகின்றன.

தாடைச் சுரப்பிகள் இருவித அமிலங்களால் ஆன ராணிப் பொருள் எனப்படும். ஒரு விதக் கவர்ச்சிப் பொருளைச் சுரக்கின்றன.

வாய் வழி உணவுப் பரிமாற்றம் மூலம் இப்பொருளை எல்லாப் பணித் தேனீக்களும் பெறுகின்றன. 

கூட்டினுள் பணித் தேனீக்களை ராணித் தேனீ தன்பால் ஈர்த்து அதனைச் சுற்றி ஒரு பரிவாரம் அமைய இச்சுரப்பானது உதவுகின்றது. 

மேலும் இப்பொருள் புதிய ராணித் தேனீ உருவாவதையும் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியையும் தடை செய்கின்றது. ராணிப் பொருள் பணித் தேனீக்கள் அடை கட்டுதல், புழு வளர்த்தல், உணவு சேகரித்தல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கின்றது.

or more details visit my links

Post a Comment

1 Comments