தேனீ வளர்ப்பை தொடங்குவதற்கு முன்னர் நாம் கவனம் செலுத்தவேண்டிய ஒரு விடையம் இனத் தேர்வு. நம்மிடையே மலைத் தேனி, அடுக்குத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ என நான்கு வகையான தேனீ இனங்கள் காணப்படுகின்றன.
மலைத் தேனீ, மற்றும் கொம்புத் தேனீ பெட்டிகளில் வைத்து வளர்ப்பதற்கு ஏற்புடையதல்ல. பொதுவாக இந்த இரண்டு வகையான தேனீக்களும் ஒரு அடை மாத்திரம் கட்டி மலை, வெளிச்சம், உஷ்னம், குளிர் போன்ற காலநிலைகளை தாங்கி திறந்த வெளியல் வாழக்கூடியவை. இவற்றுக்கு கொட்டக்கூடிய தன்மை அதிகம் உண்டு.
beekeeping தேனீ வளர்ப்பு - அடுக்குத் தேனீ |
அடுக்குத் அல்லது பொதுந்துத் தேனீ என்றழைக்கப்படும் நமது நாட்டுத் தேனீக்கள் பொட்டிகளில் வைத்து வளரக்கக் கூடியவை. அடுக்குத் தேனீக்களிலும் பல உற்பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு வகைாயான தேனீக்கள் இன்று பலராலும் விரும்பி வளரக்கப்படுகின.
அவற்றில் ஒன்று நம் நாட்டில் பொந்துகளில் அல்லது இருள் சார்ந்த இடங்களில் அடுக்காக அடைகளை கட்டி வாழ்பவை. இவற்றை பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியும்.
beekeeping தேனீ வளர்ப்பு - அடுக்குத் தேனீ |
இரண்டாவது இத்தாலியத் தேனீ. நம் நாட்டில் உள்ள தேனீக்களை நாம் இலங்கைத் தேனீ என்று அழைக்கின்றோம். அதே போன்று இத்தாலி நாட்டில் உள்ள தேனீக்களே இத்தாலியத் தேனீ.
இந்த இரண்டு வகையான தேனீ இணங்களையும் வர்த்தக ரீதியாக வளர்த்து அதிக இலாபம் பெற முடியும். இலங்கைத் தேனீக்கும் இத்தாலியத் தேனீக்களுக்குமிடையில் சில வேறுபாடுகள் காணப்பகின்றன.
beekeeping தேனீ வளர்ப்பு - அடுக்குத் தேனீ |
இலங்கைத் தேனீக்கள்
இலங்கைத் தேனீக்கள் நமது நாட்டில் இயற்கையாகவே உள்ள தேனீக்களாகும். இந்த வகை தேனீக்கள் நமது நாட்டின் சீதோசன நிலையை ஒன்றி வாழக்கூடியவையாகும். இந்த வகைத் தேனீக்கள் நமது நாட்டில் அனைத்து இடங்களிலும் வைத்து வளர்க்க முடியும்.
இலங்கைத் தேனீக்களின் தேன் சேகரிப்பு அளவு வருடத்துக்கு 10 - 15 கிலோகிராம்.
இத்தாலிய தேனீக்கள்
இலங்கைத் தேனீக்களை விட இத்தாலியத் தேனீக்கள் அளவில் சற்று பெரியது. அதேபோன்று தேன் சேகரிக்கும் அளவு இரண்டு வகை தேனீக்களுக்கிடையில் வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கைத் தேனீ ஒரு வருடத்துக்கு 10 தொடக்கம் 15 கிலோகிராம் வரை தேன் எடுக்க முடியும். ஆனால் இத்தாலியத் தேனீ வருடத்துக்கு 30 தொடக்கம் 45 கிலோகிராம் வரை தேன் எடுக்க முடியும்.
இரண்டு வகையான தேனீக்களையும் தேனீ வளர்ப்பிற்காக தெரிவு செய்யும் போது பல விடையங்களை அவதானிக்க வோண்டும். இலங்கைத் தேனீக்கள் பொதுவாக நம் நாட்டின் காலநிலையை தாங்கி வாழக்கூடியவை. ஆனால் இத்தாலிய தேனீக்கள் அவ்வறல்ல.
beekeeping தேனீ வளர்ப்பு - அடுக்குத் தேனீ |
இத்தாலிய தேனீக்கள் வனிக ரீதியாக வளர்க்க ஏற்றவை. இந்த வகைத் தேனீக்களை வைத்து தேனீப் பண்னை உருவாக்கி பாரிய இலாபத்தை அடைய முடியும்.
இத்தலிய தேனீக்களின் தேன் சேரிக்கும் தேன் வயிறும் பெரியது. அதனால்தான் தேன் சேகரிக்கும் திறனும் அதிகமாக காணப்படுகின்றன. அது மாத்திரமல்ல இத்தாலியத் தேனிக்கள் பூக்களில் உள்ள மகரந்தத்தை அதிகமாக கொண்டுவரும். அளவுக்கதிகமாக மகரந்த வரத்து காணப்படும்போது, மகரந்தந்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
இலங்கைத் தேனீக்கள் தேனீப் பிரினைச் சேகரிப்பதில்லை. ஆனால் இத்தாலியத் தேனீக்கள் தேனீப் பிசினை சேகரிக்கின்றன. இதன்மூலம் தேனி வளர்ப்பாளர்கள் அதிக இலாபம் பெற முடியும்.
நமது நாட்டில் புதிதாக தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தேனீ வளர்க்கத் தொடங்குவதாயின் இலங்கைத் தேனீக்களை தேர்வுசெய்து வளர்த்து பல நேரடி அனுபவங்களைப் பெற்று அதில் வெற்றி கண்ட பின்னர் வர்த்தக ரீதியாக பெரியலவில் இத்தாலிய தேனீக்களை வளர்த்து இலாமீட்டக்கூடிய ஒரு தொழிலாக தேனீ வளர்ப்புத் தொழிலை செய்யமுடியும்.
தொடரும்
எம்.எஸ். முஹம்மட்,
தலைவர் தென்கிழக்கு தேனீ வளர்ப்பு ஒன்றியம்,
அட்டாளைச்சேனை.
மேலதிக விபரங்களுக்கு 0774024485.
0 Comments