Header Ads Widget

Responsive Advertisement

beekeeping தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ





ஆண் தேனீ

தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

ஒவ்வொரு தேன்கூட்டிலும், ராணித் தேனீ, ஆண் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்கள் என்று மூன்று வகை தேனீக்கள் உண்டு. இதில் 95 வீத வேலைக்காரத் தேனீக்களும், 5 வீத ஆண் தேனீக்களும், ஒரே ஒரு ராணித் தேனீயும் இருக்கும்.

ஆண் தேனீக்கள் அளவில் ராணித் தேனீயை விட சிறியதாகவும் பணித் தேனீக்களை விட பெரியதாகவும் காணப்படுன்றது. ஆண் தேனீக்களை சோம்பரி தேனீக்கள் என்று அழைக்கப்படுகின்றன. காரணம் தேனீ கூட்டத்தில் வேலையே செய்யாமல் ஏனைய தேனீக்களை நம்பி வாழக்கூடிய ஒரே ஒரு தேனீ ஆண் தேனீ ஆகும்.


ஆண் தேனீக்களின் உருவாக்கம்

தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

புணர்ச்சியுறாத மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்களால் இடப்படும் முட்டைகள் கருவுறாது. அவ்வாறான முட்டைகளிலிருந்து அதிகமான ஆண் தேனீக்கள் தேன்றுகின்றன.

அதுமட்டுமல்ல சில நேரங்களில்  ராணித் தேனீக்கள் இல்லாத கூட்டங்களில் சில பணித் தேனீக்கள் ராணித் தேனீயைப் போல முட்டையிடும். 

இவற்றிலிருந்தும் உருவில் சிறிய ஆண் தேனீக்கள் உருவாகின்றன.

தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

ஆண் தேனீக்களின் வாழ்க்கை
ஆண் தேனீக்கள் அளவில் சற்று பெரிய அறுங்கோண அறைகளில் கருவுறாத முட்டைகளிலிருந்து உருவாகின்றன. இந்த வகை தேனீக்கள் புழு வளரப்பு அறையில் உள்ள புழு அடையில் இருந்து ஆண் தேனீயாக வெளியே வருவதற்கு 24 நாட்கள் தேவைப்பகிது. 

தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

தேர்வுசெய்யப்பட்ட கருவுறாத முட்டைக்கு முதல் நாள் முதல் மூன்றாம் நாள் வரை அரசப்பசை (Royal Jelly) உணவும் பின்னர் பணித் தேனீக்களால் வழங்கப்படுகின்றன. 

நான்காம் நாள் தொடக்கம் பதினைந்தாம் நாள்வரை கூட்டுப் புழு பருவத்தில் பூக்களில் இருந்து கொண்டு வரப்படும் மகரந்தம் உணவாக வழங்கப்பட்டடு பின்னர் பதினைந்ததாம் நாள் தொடக்கம் இருபத்தி நான்காம் நாள் வரை புழு வளர்ப்பு அறைகளில் மகரந்த மூடி போட்டு அடைக்கப்படுவிடும். 

பின்னர்  24 ஆம் நாள் ஒரு பூரண ஆண் தேனீயாக வெளியாகும்.

ஒரு ஆண் தேனீயின் ஆயுட் காலம் 60 நாட்களாகும். 

முதல் நாள் தொடக்கம் மூன்றாம் நாள் வரை முட்டை பருவம், 3ஆம் நாள் தொடக்கம் 7ஆம் நாள் வரை கூட்டுப் புழு பருவம், 8ஆம் நாள் தொடக்கம் 16ஆம் நாள் வரை முழு வளர்ச்சி அடைந்த புழுவாகவும், 17ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வளர்ச்சி பெற்ற ஆண் தேனீக்களாக வெளியான்றன.

ஆண் தேனீக்களின் பணிகள்

தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

இவை பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. 

தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன. 

இவை செய்யக் கூடிய உருப்படியான ஒரு காரியம் புதியதாக வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். 

இந்த ஒரு காரணத்திற்காகவே தான் ஆண் தேனீக்கள் ஏனைய வேலைக்கார தேனீக்களால் சகித்துக் கொண்டு வாழ்கின்றன.

தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
beekeeping தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

ஆண் தேனீக்கள் வெளிவந்த 12 நாட்களுக்குப் பிறகு இவை ராணித் தேனீயுடன் புணர்ச்சிக்குத் தயாராகின்றன. ஆண் தேனீக்கள் பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன.

ஆண் தேனீக்களுக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது. பணித் தேனீக்களால்  உணவு ஊட்டப்படுவதையே ஆண் தேனீக்கள் விரும்புகின்றன. இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன.

beekeeping தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
beekeeping தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

புற உறுப்புகள்:

beekeeping தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ
beekeeping தேனீ வளர்ப்பு - ஆண் தேனீ

இரு பெரிய கூட்டுக் கண்கள் தலையின் மேல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கும். இவை எப்புறத்திலிருந்தும் எதிர்ப்படும் பொருட்களைக் காண வல்லது. 

தலையில் உள்ள இரு உணர் கொம்புகள் சற்று நீளமாகவும், பல்லாயிரக்கணக்கான நுண்ணிய நுகரும் உறுப்புகளுடனும் இருக்கும். கூரிய பார்வையும், நுகரும் ஆற்றலும் புணர்ச்சிப் பறப்பின் பொழுது ராணித் தேனீயைக் கண்டறிய உதவுகின்றன. 

ஆண் தேனீகும் மகரந்தக் கூடை இல்லை. ஏனைய தேனீக்களுக்கு இருக்கின்ற கொடுக்கு ஆண் தேனீக்களுக்கு இல்லை.

எம்.எஸ்.முஹம்மட்,
தலைவர் கிழக்கிழங்கை தேனீ வளர்ப்பு ஒன்றியம்,
அட்டாளைச்சேனை.


Post a Comment

0 Comments