தேனீ வளர்ப்பு
உலகில் நான்கு வகை தேனீக்கள் உள்ளன. மலைத் தேனீ, அடுக்குத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ.
இந்த நான்கு வகை தேனீக்களிலும் உற்பிறிவுகள் நிறைய உள்ளன.
இந்த நான்கு வகை தேனீக்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர் தேனீக்கள் பற்றி அராய்ச்சி செய்த விஞ்ஞானி அல்பர்ட் அய்ஸ்டீன் தேனீக்களைப் பற்றி கூறும் போது ”தேனீக்கள் இந்த உலகில் இல்லை என்றால் நான்கு வருடங்களுக்கு மேல் உலகம் இருக்காது.” என்று தேனீக்களை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி அல்பர் அய்ன்டீனின் கூறியுள்ளார்.
தேனீக்களின் வகையும் அதன் தன்மைகள் பற்றி ஆராய்வோம்.
மலைத் தேனீ (Apis Dorsata)
beekeeping வளர்ப்பதற்கு உகந்த தேனீ வகைகள் |
மலைத் தேனீ அளவில் ஏனைய தேனீக்களை விட பெரியது.
இது உயர்ந்த மலைகளில் பாரிய ஒரு அடை மாத்திரம் கட்டி வாழும். இவற்றுக்கு தேன் சேகரிக்கும் தன்மை அதிகம்.
இவற்றுக்கு கொட்டும் தன்மையும் அதிகம்.
இவற்றின் விஷத் தன்மையும் அதிகம்.
அதிக மூர்க்கத் தனம் கொண்டது. இவை வெட்டவெளியில் வாழும் தன்மை கொண்டது.
இவை வளர்ப்பதற்கு ஏற்றதல்ல.
அடுக்குத் தேனீ (Apis indica)
beekeeping வளர்ப்பதற்கு உகந்த தேனீ வகைகள் |
அடுக்குத தேனீ எனப்படும் இலங்கைத் தேனீ இத்தாலியத் தேனீயை விட சிறியதும் கொம்புத் தேனீயை விட அளவில் பெயரியதுமாகும்.
இவை இலங்கை இந்தியா பங்கலாதேஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இவை அடுக்கடுக்காக அடைகளை கட்டி இருட்டில் வாழக்கூடியது.
இவை மரப் பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும், வீட்டின் கூறைகளிலும், பாழடைந்த கினறுகளிளும் அடுக்கடுக்காக கூடி கட்டி வாழ்க்கூடியது.
இவை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் திறன் கொண்டது. காலை ஐந்து மணியிலிருந்து தனது செயற்பாட்டை தொடங்கி மாலை ஆறு மணிவரைக்கும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும்.
இதன் தேன் சேகரிக்கும் திறனும் சாதாரனம். கொட்டக்கூடிய தன்மை குறைவு. ஆண்டுக்கு ஒரு கூட்டில் 10 முதல் 15 கிலோ தேன் எடுக்கலாம்.
இவற்றை வளர்க்க அதிக முதலீடு தேவையில்லை. இவை நாட்டின் சீதோசன நிலைக்கு ஏற்றவாறு வாழக்கூடியது.
இவை பெட்டிகளில் வைத்து வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றது.
கொம்புத்தேனீ (Apis florea)
beekeeping வளர்ப்பதற்கு உகந்த தேனீ வகைகள் |
கொம்புத்தேனீ மரக் கிளைகளில் ஒரு அடை மட்டும் கட்டி வாழ்பவை. கிழக்காசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.
இவை அளவில் அடுக்குத் தேனீயை விட சற்று சிறயதும், கொசுத் தேனீயை விட அளவில் சற்று பெரியதுமாகும். இதனை சிறு தேனீ என்றும் அழைக்கின்றனர்.
இவை நமது சுற்றுப்புற சூழலில் உள்ள சிறிய மரக் கிளைகளில் ஒரே ஒரு அடை மட்டும் கட்டி வாழும். அயல் மகரந்த சேர்க்கைக்கு மிகவும் உதவுகின்றன.
இவை கொட்டும் தண்மை கொண்டது. மிக மிக குறைந்தளவில் தேன் சேகரிக்கும் இவை பெட்டிகளில் வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல.
இவற்றை தேனுக்காக வேண்டி கலைக்காமல் இருப்பது நல்லது.
கொசுத் தேனீ (Apis melipona )
beekeeping வளர்ப்பதற்கு உகந்த தேனீ வகைகள் |
கொசுத் தேனீ மற்றய தேனீக்களை விட அளவில் மிகச்சிறியது.
இவை பாழடைந்த கட்டட இடுக்ககுகளுக்குள்ளும் சிறு சிறு பாறை இடுக்குகளுக்குள்ளும், மரப் பொந்துகளுக்குள்ளும் கூடு கட்டி வாழக் கூடியது.
இவற்றுககு கொட்டக்கூடிய கொடுக்குகள் இல்லை இதனால் இவற்றை கொடுக்கில்லாத் தேனீ எனறம் அழைக்கின்றனர்.
அது மாத்திமல்ல ஆங்கிலத்தில் இதனை Dammer Bee எனவும் அழைக்கின்றனர்.
வருடத்துக்கு ஒரு கூட்டிலிருந்து 350 கிராம் தொடக்கம் 500 கிராம் வரை தேன் கிடைக்கும்.
மிகச் சிறிய மருத்துவச் செடிகளில் பூக்கும் தேனை எடுப்பதால் இந்த தேனில் மருத்துவ குணம் அதிகம்.
இவை மரப்பிசின்களைக் கொண்டு கூடு கட்டி வாழும் இயல்புடையது.
இவற்றையும் பெட்டிகளில் அல்லது மண்பானை அல்லது தேங்காய்ச் சுறட்டை போன்ற இன்னும் பல வகையான கூடு அமைப்பை செய்து இவைகளை வளர்க்கலாம்.
ஆக்கம்:
எம்.எஸ்.முஹம்மட் (தலைவர்)
அட்டாளைச்சேனை தேனீ வளா்ப்பு ஒன்றியம்
அட்டாளைச் சேனை.
for more details visit my links
https://www.youtube.com/watch?v=_AL2xrimU-Y&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl
https://www.youtube.com/watch?v=_AL2xrimU-Y&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl
0 Comments