bee instruction தேனீ ஓர் அறிமுகம் |
தேனீக்கள் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை.
தேனீக்களை இறைவன் இந்த உலகத்தாருக்கு ஒரு கொடையாக படைத்துள்ளான்.
மனிதர்கள் இந்த உலகில் பசி பட்டினியின்றி நிம்மதியான வாழ்க்கை வாழ தேனீக்களின் பங்கு அளப்பரியது.
தேனீக்கள் இந்த உலகை விட்டு அழிந்து விட்டால் பயிர்கள், மரங்கள், செடிகொடிகள் அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிடும்.
மரம் வளர விதைகள் தேவை. விதை உருவாக காய்கள் தேவை. காய்கள் உருவாக பூக்கள் தேவை.
ஒரு மரத்தில் உள்ள பென் பூ காயாக மாருவதற்கு ஒரு ஆன் பூ தேவை அந்த ஆன் பூவின் மகரந்தம் பென் பூவுடன் இனையும் போதுதான் பென் பூ காயாகி பின்னர் அது நாம் உன்னக்கூடிய சுவையான பழமாக மாறுகிறது.
தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன் உட்பட பல்வேறு பெறுமதிமிக்க நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மனிதரால் தேனீ வளர்ப்பானது மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் தேனீ வளர்ப்பிற்காக பயன்படுத்தும் தேனீ வகையானது ஏபிஸ் சேரானா இன்டிக்கா (யுpளை உநசயயெ iனெiஉய) எனும் விஞ்ஞானப் பெயரினால் அழைக்கப்படுகின்றது.
தேனீக்கள் ஓரளவு இருளான, குளிரான இடங்களில் குடித்தொகை ஒன்றாக அதாவது சமுதாயமாக வாழ்கின்றது.
இவை மெழுகினை பயன்படுத்தி அறுகோண வடிவ அறைகளாலான சமாந்தரமாக காணப்படும் வதைகளைக் கொண்ட தேன் கூடுகளை உருவாக்குகின்றன.
தேனீக்களால் கிடைக்கும் நன்மைகள்
தேன்:
தேனீக்களால் உட்கொள்ளப்படும் அமிர்தம் தேனீக்களின் இரைப்பையில் சமிபாடடைந்து தேன் உருவாகின்றது.
தேன் சுவைமிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான உணவு ஒன்றாகும்.
தேனில் எளிய வெல்லமே காணப்படுவதனால் இது குழந்தைகளுக்கும் நோயாளிகள் மற்றும் அதிகளவு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கும் தேவையான சக்தியை பெற்றுக் கொடுக்கும் சிறந்ததொரு உணவாகும்.
மேலும் பல்வேறுபட்ட உணவு வகைகள், பானங்களை சுவையூட்டவும், உணவு வகைகளை நீண்டகாலம் வைத்திருப்பதற்கும் தேன் பயன்படுத்தப்படுகின்றது.
bee instruction தேனீ ஓர் அறிமுகம் |
உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்கள், எரிகாயங்கள், நாட்பட்ட காயங்கள் மற்றும் தோலில் ஏற்படும் சிராய்ப்புகள், தொண்டையில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றிற்கு தேன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்துறையில் மருந்து உற்பத்தியில் தேன் பரவலாக பயன்படுத்தப்படும் மூலப்பொருள் ஒன்றாகும்.
0 Comments