தேனீ வளர்ப்பிற்கு தேனீப் பெட்டி
தேனீ வளர்ப்பிற்கு தேனீப் பெட்டி |
தேனீ வளர்ப்பு பற்றி தொடராக இக்கட்டுரை எழுப்பட்டுள்ளது. இதன் தொடரை தொடர்ந்து வாசிப்பதனூடாக தேனீ வளர்ப்பை சுயமாக மேற்கொள்ள முடியும். தேனீ வளர்க்க விரும்புபவர்கள் அமட்டுமல்லாது தேனீக்கள் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களும் பயன்பெறலாம். வளர்க்க விருப்பமில்லை. ஆனால் எனது பகுதியில் இருக்கும் தேனை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களும் இக்கட்டுரையை சாவிப்பதனூடாக தேனை சுயமாக எடுக்க முடியும்.
தேனீ வளர்ப்பிற்கு அவசியமான பொருட்களில் முதன்மையானது தேனீப் பெட்டி.
நமது சுற்றுப்புற சூழலில் உள்ள தேனீக்களை எடுத்து எமது கட்டுப்பாட்டில் வளர்க்கத் தேவையான பொருட்களில் தேனீப் பெட்டி முதன்மையானது.
தேனீப் பெட்டியை நாம் விரும்பிம் விதமாக அமைக்க முடியாது.
இதற்கு சர்வதேச அளவில் ஒரு அளவுகோள் இருக்கின்றது.
அதேபோன்று தேசிய றிப்பிட்ட அளவை நிர்னயம் செய்துவைத்துள்ளார்கள்.
அந்த வகையில் இலங்கையில் விவசாயத்திணைக்களம் தேனீ வளர்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.
விவசாயத் திணைக்களம் இரண்டு வகையான தேனீ வளர்ப்புப் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெட்டியில் ஒன்று 8 சட்டங்களை கொண்ட சதுர வடிவிலான பெட்டி.
இரண்டாவது 6 சட்டங்களைக் கொண்ட நீள் சதுர வடிவிலான பெட்டி.
உரிய பிரமாணங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட தேனீப் பெட்டி ஒன்றினை உபயோகிப்பதன் மூலம் தேனீக்குடியினை இலகுவாகக் கையாள முடியும்.
தேனீப் பெட்டிகளை தயாரிக்க பைனஸ், கொஸ்பொட, சைப்பிரஸ், அடபொட வனசபு, மா, மார, செம்பகம், மில்ல, தேக்கு, பிகினி, கொலன், ஊருகபு, வெலன் போன்ற மரப் பலகைகளை பயன்படுத்த முடியும்.
தேனீப் பெட்டி ஒன்றை தெரிவு செய்யும் போது கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்.
* உரிய பிரமாணங்களுக்கு அமைவானதாக காணப்படல் வேண்டும்.
* பெட்டியை தயாரிக்க பயன்படுத்தியுள்ள பலகை வகையானது நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* குறித்த பலகையானது காரமான, மணம் அற்றதாக இருத்தல் வேண்டும்.
* சட்டங்களுக்கிடையில் உரிய இடைவெளி காணப்படல் வேண்டும்.
* பெட்டியில் காணப்படும் வதைச் சட்டங்கள் உறுதியானதாகவும் இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
* பெட்டியின் பாகங்களை இடைவெளி இல்லாது இணைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* தேனீப் பெட்டிகளை விவசாயத் திணைக்களத்தில் அல்லது மாகாண விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தேனீப் பெட்டி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வது மிகவும் பொருத்தமானது.
* உரிய பிரமாணங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட தேனீப் பெட்டி ஒன்றின் பாகங்கள் 18 சிகைப் பலகை தேனீ பெட்டியின் மேற்பகுதியினை மூடுவதற்கு பயன்படும் வாயு பரிமாற்றத்திற்காக கம்பி வலையினால் மூடப்பட்ட 5 துளைகள் காணப்படும்.
* கூரை கடும் வெயில் மற்றும் கடும் மழையிலிருந்து பெட்டியினைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கூரை உதவுகின்றது.
* கூரையானது பெட்டியின் பருமனை விட நீளம் மற்றும் அகலத்தில் 2 அங்குலம் கூடியதாக பலகையினால் தயாரிக்கப்பட்டு, அதன் வெளிப்புறமானது தார்சீட்டினை பயன்படுத்தி உறையிடப்படும்.
* வாயுப் பரிமாற்றத்தினை மேற்கொள்வதற்காக கூரையின் உட்புறத்தில் 10 மி.மீ தடிப்புள்ள 4 கம்புத் துண்டுகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மேற்பக்கத் தோற்றம் உட்பக்கத் தோற்றம் 19 தேன் பெட்டியும் தேன் சட்டங்களும் வதைப் பெட்டிக்கு மேலாக காணப்படும் தேன் சட்டங்களை கொண்ட பகுதியாகும்.
இச்சட்டங்களில் வதைகள் உருவாக்கப்பட்டு தேன் சேகரிக்கப்படும். தேன் பெட்டி வதைகளில் காணப்படும் தேனே அறுவடையாகப் பெறப்படுகின்றது.
வதைப் பெட்டியும் வதைச் சட்டங்களும் தேன் பெட்டிக்குக் கீழாக காணப்படும் வதை பெட்டியானது தேன் பெட்டியின் உயரத்தின் இருமடங்கு உயரத்தினைக் கொண்டது.
தேனீக்குடியில் உள்ள சகல அங்கத்தவர்களும் வதைப் பெட்டியினுள் வசிப்பதுடன் அவை குஞ்சு பொரித்து அவற்றை காக்கும் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
போலி வதைச் சட்டம் இது வதைப்பெட்டியின் உட்பகுதியில் உள்ள இட வசதியினை எல்லைப் படுத்துவதற்காக ஹாட்போட் துண்டு ஒன்றினைப் பயன்படுத்தி சுவர் ஒன்றினைப் போல் ஆக்கப்பட்டிருக்கும் தகடு ஒன்றாகும்.
வதைப் பெட்டியில் வதைகளின் 20 அடிப்பலகை இப்பகுதியின் மேல் வதைப் பெட்டியானது வைக்கப்படுவதுடன் அதில் தேனீக்கள் நடமாடுவதனை இலகுபடுத்துவதற்கு ஒரு வாயிலும் வைக்கப்பட்டிருக்கும்.
வாயிற் தகடு உலோகத்தால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் அடிப்பலகையில் உள்ள வாயிலானது முடிப்பட்டிருக்கும்.
இத்தகடானது இராணி வாயில் எனவும் அழைக்கப்படும். இராணித் தேனீயானது தேனீப் பெட்டியிலிருந்து வெளியே செல்லாது பாதுகாக்கும் நோக்கத்திற்காக இது பயன்படுத்தப்படுகின்றது.
வாயிற் தகட்டின் ஊடாக வேலையாட் தேனீக்களுக்கு மாத்திரமே வெளிச் செல்லவோ அல்லது உட்புகவோ முடியும்.
(தொடரும்....)
0 Comments