Header Ads Widget

Responsive Advertisement

beekeeping - worker bees தேனீ வளர்ப்பு - பணித் தேனீ


https://www.youtube.com/watch?v=0pubAMZDXuk&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl&index=4




beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ
beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ

பணித் தேனீ

தேனீ கூட்டத்தில் மூன்று வகையான தேனீக்கள் காணப்படுகின்றன. ராணித் தேனீ, ஆண் தேனீ மற்றும் பணித் தேனீ போன்ற மூன்று வகையான தேனீ வகைகள் காணப்படுகின்றன.

ஒரு தேனீக் கூட்டதில் 95 வீதமான தேனீக்கள் பணித் தேனீக்களாகும். பணித் தேனீயானது பூரண வளர்ச்சியடையாத பெண் தேனீ ஆகும்

பணித் தேனீக்கள் ராணித் தேனீ மற்றும் ஆண் தேனீக்களை விட அளவில் சிறியவை. உடல் முழுவதும் கிளையுடன் கூடிய ரோமங்கள் இருக்கும். வயிற்று நுனியின் மேற்பகுதியில் ஒரு வாசனை சுரப்பி உள்ளது.

இச்சுரப்பி ஒவ்வொரு கூட்டிற்குமான தனித் தன்மை பொருந்திய வாசனையை உண்டுபன்னுகின்றன.

beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ
beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ

இந்த வாசனையைக் வைத்து தான் தனது கூட்டத்தில் உள்ள மற்ற ஏனைய  பணித் தேனீக்களை அடையம் கண்டுகொள்கின்றன. அதே போன்று தங்களின் கூடுகளையும் அறிந்து கொள்கின்றன.

beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ
beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ

பணித் தேனீயானது தேனியாக வெளியாகிய நொடியில் இருந்து இறக்கும் கடைசி நொடி வரைக்கும் பணி செய்துகொண்டே இருருக்கும் இதன் காரணமாகவேதான் பணித் தேனீ என்ற பெயரும் வந்தது.

ஒரு தேனீக் கூட்டத்தை எடுத்து பார்த்தால் ஆரம்பம் முதல் கடைசி வரையான அனைத்துப் பணிகளையும் இந்த பணித் தேனீக்கள் செய்கின்றன. அதுமட்டுமல்ல பணித் தேனீக்கள் விசேட பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.


beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ

கொட்டும் தன்மை
பணித் தேனீக்கள் தங்களையும் தங்களின் கூட்டையும் தங்களின் கூட்டத்தையும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதம் கொடுக்கு. 

தேனீக் கூட்டத்தல் கொட்டக்கூடிய கொடுக்கு பெணித் தேனீக்களுக்கும் ராணித் தேனீக்கும் தான் இருக்கும். ஆண் தேனீக்களுக்கு கொட்டக்கூடிய கொடுக்கு இல்லை.

பணித் தேனீக்களின் கொடுக்கு அதன் வயிற்றின் நுனிப் பகுதியினுள் உள்ளது. தேனீ கொட்டும் பொழுது வெளிப்படும் விஷம் அமிலச் சுரப்பியில் சுரக்கின்றது. விஷத்துடன் வெளிப்படுத்தப்படும்.

ஐசோபென்டைல் அஸ்டேட்என்ற எச்சரிக்கை வேதிப்பொருளானது மற்ற ஏனைய தேனீக்களையும் வேதிப்பொருள் உள்ள இடத்துக்கு ஈர்த்து  கொட்டத் தூண்டுகின்றது. இதன் காரணமாகவேதான் ஒரு தேனீ கொட்டினால் மற்ற ஏனைய தேனீக்களும் வந்து கொட்டுகின்றன.

பணித் தேனீ தனது கொடுக்கை கொட்டிய இடத்திலிருந்து வெளியே எடுத்தால் தேனீயின் உயிர் பிழைத்துக்கொள்ளும் இல்லையேல் கொடுக்கு முறிவு ஏற்பட்டால் தேனீ இறுதியில் அதிக நீர் இழப்பு காரணமாக இறக்கின்றது

beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ
beekeeping- worker bees  தேனீ வளர்ப்பு - பணித் தேனீ

பணிகள்
பணித் தேனீக்கள் கூட்டில் இருந்து வெளியாகி முதல் மூன்று வாரங்கள் கூட்டினுள் இருந்து கொண்டு பல வகையான  உட்புறப் பணிகளை செய்யும்.

அதன் பின்னர் வாழ்நாள் முடியும் வரை வயல் வெளித் தேனீயாகி வெளிப்புறப் பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்கின்றது

இத்தேனீக்களின் பணி அவற்றின் வயதிற்கேற்ப மாறுபடுகின்றது.




Post a Comment

0 Comments