Header Ads Widget

Responsive Advertisement

stingless bee கொடுக்கில்லாத் தேனீ - கொசுத் தேனீ

stingless bee கொடுக்கில்லாத் தேனீ - கொசுத் தேனீ
உலகில் நான்கு வகை தேனீக்கள் காணப்படுகின்றன. மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ அல்லது கொசுத்தேனீ. இந்த நான்கு வகைத் தேனீக்களிலும் பல உற்பிரிவுகள் காணப்படுகின்னறன. 

உதாரணமாக மலைத் தேனீக்களிலும் பல உற்பிரிவுகள் உள்ளன. அதேபோன்று ஏனைய தேனீக்களிலும் காணப்படுகின்றன.

கொசுத் தேனீ அல்லது கொடுக்கில்லாத் தேனீ. கொசுத் தேனீ என்றால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொசுத் தேனீ அளவில் நுளம்பை விட பெயரியதும் கொம்புத் தேனீயை விட அளவில் சிரியது.


கொடுக்கில்லாத் தேனீக்கள் பொதுவாக பாழடைந்த இடங்களிலும் சிறு மரப் பொந்துகளிலும் கல் இடுக்குகளிலும் இரும்புக் கம்பிகளுக்கு உள்ளும், கூடு கட்டி வாழக்கூடியவை.


கொசுத் தேனீக்கள் மெழுகு சுறப்பதில்லை. அதன் கானத்தினால் அவை அடை கட்டுவதில்லை. மாராக அவைகள் மரங்களில் உள்ள பிசின்களை எடுத்து வந்து ஒரு வித உமிழ்நீர் சுறப்பிகளையும் சுறந்து பிசின்களை தங்களுக்கு தேவையான விதத்தில் கலந்து தங்களின் இருப்பிடத்தையும் தங்களின் முட்டை இடும் இடம் மற்றும் தேன் சேகரிக்கும் இடம் மற்றும் மகரந்தம் சேகரிக்கும் இடம் போன்றவற்றை செய்கின்றன.


இவை அளவில் சிறியவை என்பதால் எதிரிகள் இலகுவில் பிடித்து விடும். ஆனால் இவை எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு சிறந்த மதி நுற்பங்களை கையள்கின்றன.


இவற்றிலிருந்து குறைந்த அளவு தேன் கிடைக்கின்றன. வருடத்துக்கு ஒரு கூட்டிலிருந்து 250 கிறாம் தொடக்கம் 500 கிறாம் வரை தேன் கிறைக்கின்றன. இவற்றின் தேன் மருத்துவ குனம் அதிகம் உள்ளவையால் இந்த தேனுக்கு விலையும் அதிகம். 


இந்த தேனீக்கள் அளிவின் விளிம்பில் இருக்கின்றன. இவற்றை வளர்ப்பதன் ஊடாக மருத்துவ குனம் அதிகம் உள்ள தேனை அடைவது மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினரின் சிறந்த ஆரோக்கியத்தையும் பெற முடியும்.

ஆகவேதான் தேனீ வளர்ப்பாளர்கள் அடுக்கு தேனீக்களை மாத்திரம் வளர்காமல் கெசுத் தேனீக்களைப் பற்றி அறிந்து, கொசுத் தேனீக்களையும் வளர்பதன் ஊடாக அதில பயனை பெற்ற முடியும்.


எம்.எஸ்.முஹம்மட்
தலைவர் கழக்கிலங்கை தேனீ வளர்ப்பு சங்கம்
அட்டாளைச் சேனை.


மேலதிக விபரங்களுக்கு 0774024485

Post a Comment

0 Comments