ராணித் தேனீயின் பணிகள்
ராணித் தேனீ தேனீக் கூட்டத்தின்
தலைவி. ராணியின் தலைமையில் தேனீக் கூட்டம் இயங்கும். பொதுவாக ராணித் தேனீக்கு பணிகள்
இல்லை என்று சொல்வார்கள் ஆனால் ராணிக்கும் பல பணிகள் உண்டு.
#queen bee #queen bee life cycle #msbeefarm #beekeeping |
ராணித் தேனீயானது கூட்டை விட்டு வெளியாகியதும் முதல் பணியே அதோடு சோர்ந்து வெளியான ராணித் தேனீக்ளுடனும் ஏற்கனெவே உள்ள ராணித்
தேனீயுடனும் போட்டி போட்டு ஏனைய அனைத்து ராணித் தேனீக்களையும் தனது கொடுக்கால் குத்திக் கொன்று வெற்றி பெற்ற
பின்னர் தனது கூட்டத்தின் நிர்வாக பணியை ஏற்கும்.
#queen bee #queen bee fighting #queen bee life cycle #msbeefarm |
ஆரம்பமே ஒரு பெரிய போட்டி அதில்
வெற்றிபெற்றால்தான் தலைமை. இது முதல் படி. அதில் வெற்றிபெற்றதும் தனது கூட்டதின் நிர்வாக
பொருப்பை ஏற்று ஒரு வார காலப்பகுதியில் மற்றுமொரு சவாலை எதிர்கொள்ளவேண்டும்.
#queen bee #queen bee mating #queen gee life cycle #msbeefarm |
#queen bee #queen bee life cycle #queen bee life #msbeefarm |
மாறாக வேறு கூட்டினுல் நுழைந்தாலோ
அல்லது தேனீக்களின் எதிரகளான பச்சைக் குருவி, பெரும் குளவி, காகம், ஆந்தை, களுகு போன்ற
தேனிக்களின் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் அதன் நிலை கவலைக்கிடமானதாகிவிடும்.
இரண்டாவது தடையையும் வெற்றிகரமாக
தாண்டிவிட்டால் ஒரு வாரத்திற்கு பின்னர் மூன்றாவதும் தொடர்ச்சியானதுமான பணி தொடரும்.
இந்தப் பணியானது அதன் ஆயுட்காலம் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்ப் பணியில் குறைவு
அல்லது தொய்வு ஏற்படும் போது மற்ற வேலைக்கார தேனீக்கள் புதிய ராணியை உருவாக்கத் தொடங்கிவிடும். https://www.youtube.com/watch?v=ntOTxLEadns
#queen bee egg laying #queen bee life cycle #msbeefarm |
ராணியின்
மூன்றாவதும் தொடர்ச்சியானதுமான பணி முட்டையிடுவது. ராணி முட்டையிடத் தொடங்கியதும் முட்டையிடுவதைத்
தவிர வேறு எந்த வேலையும் கிடையாது. சாப்பாடு கூட ஏனைய வேலைக்கார தேனீக்களால் ஊட்டப்படுகிறது.
ராணித் தேனீயானது இரண்டு வகையான
முட்டைகளை இடும். ஆண் தேனீக்களை உருவாக்க கருவாறாத முட்டைகளையும், பணித் தேனீக்களை உருவாக்க கருவுற்ற முட்டைகளையும் இடும்.
#queen bee egg #queen bee life #msbeefarm |
ஒரு முட்டையிடும் இயந்திரம் போல நாளொன்றுக்கு சராசரியாக 400 – 5000 முட்டகைள் வரை இடுகின்றது.
10 தொடக்கம் 20 வரையான முட்டைகளை
இட்ட பின்னர் வேலைக்கார தேனிக்கள் உணவு ஊட்டுவதும் ராணியின் காள்களை அமுக்கி விடுவதும்
போன்ற வேலைகளை தனது உதவியாட்களை வைத்து செய்கிறது. https://www.youtube.com/watch?v=ntOTxLEadns
முட்டை இடுவதற்கான புழு வளர்ப்பு
அடை அறைகள் முற்றுமுழுதாக துப்பரவு செய்யப்பட்ட பின்னர் அடை அறைகளுக்குள் முட்டை இடும்.
பழைய புழு வளரப்பு அடை அறைகளை விட துதிதாக கட்டப்பட்ட அடை அறைகளில் மிகவும் விரும்பி
முட்டையிடும்.
கருத்த பழைய
அடை அறைகளில் அதிகம் முட்டையிடுவதில்லை. முட்டையிடப் போதிய அறை வசதியில்லாத சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட
முட்டைகளை ஒரே புழு வளர்ப்பு அடை அறைகளில் விடும். https://www.youtube.com/watch?v=ntOTxLEadns
#queen bee cage #queen bee #queen bee life cycle #msbeefarm |
புணர்ச்சியில் தோல்வியுற்ற அல்லது வயது முதிர்ந்த
அல்லது உடல் ஊனமுற்ற
அல்லது பெட்டி ஆய்செய்யும் போது ராணித் தேனீ இரண்டு அடை அறைகளுக்கிடையில் சிக்கி உடல்
ஊணமடைந்த ராணித் தேனீயால் சரிவர முட்டையிட முடியாது.
வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் அதிகமாக கருவுறாத முட்டைகளை மட்டுமே இடும். அத்தகைய முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் மட்டுமே உருவாக்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் வேலைக்கார
தேனீக்கள் ஒன்று சேர்ந்து புதிய ராணியை உருவாக்க புதிய ராணித் தேனீ கூடுகளை புழு வளரப்பு
அடை அறைகளில் கீழ் நோக்கி அமைத்து அதில் கருவுற்ற சிறந்த முட்டைகளை வைத்து புதிய ராணித்
தேனீக்களை உருவாக்கத்தொடங்கும். https://www.youtube.com/watch?v=ntOTxLEadns
or more details visit my links
https://msbeefarm.business.sitehttps://www.youtube.com/watch?v=_AL2xrimU-Y&list=PL5500v7iJO6Au6tWZNazUz_Ne_2JGqTgl
https://msbeefarm.business.site
https://msbeefarm.wordpress.com/
https://www.linkedin.com/in/ms-mohamed-0133a9174/
https://www.linkedin.com/company/msbeefarm/about/
https://www.facebook.com/
https://www.facebook.com/beeunion/?modal=admin_todo_tour
https://www.dailymotion.com/video/x71bwv1
https://www.facebook.com/Msbeefarm-588532581595528
https://tamilmsm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html
https://msbeefarm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html
https://msbeefarm.business.site
https://msbeefarm.wordpress.com/
https://www.linkedin.com/in/ms-mohamed-0133a9174/
https://www.linkedin.com/company/msbeefarm/about/
https://www.facebook.com/
https://www.facebook.com/beeunion/?modal=admin_todo_tour
https://www.dailymotion.com/video/x71bwv1
https://www.facebook.com/Msbeefarm-588532581595528
https://tamilmsm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html
https://msbeefarm.blogspot.com/2019/01/beekeeping-sri-lanka.html
0 Comments